:::: MENU ::::
  • welcome our Tamil Christian News

  • our email: tamilchristiannews@gmail.com

  • add your news FREE.Just send email

Send your any Christian News.Automatically Published Here

23 July 2014

  • 7/23/2014 01:34:00 a.m.

கிருபையினால் நம்மை அழைத்து, தேவக்கிருபையினால் காத்துவரும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் என் அருமை சகோதர, சகோதரிகளுக்கு என் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை பூமாலையாய் ஊங்களுக்கு வாழ்த்தி வழங்குகிறேன்.
வேதம் சொல்லுகிறது, இந்த “வருஷத்தை அவர் நன்மையால் முடிசூட்டுகிறார்” என்று. (சங்கீதம் 65:11). அப்படியேன்றால், யாருக்கு எந்த நன்மையினால் முடிசூட்டுவார்? ஒன்றுமட்டும் தெறிகிறது; முடிசூட்டுவார் என்று சொல்லப்பட்டிருப்பதினால், அவர் தரும் நன்மை எல்லோருக்கும் என்று நினைக்க வழியில்லை. அப்படியேன்றால் முடியாருக்கு சூட்டுவார்கள்? முடியாருக்கு சூட்டுவார்கள் என்றால், இராஜாவின் பிள்ளைகளான இராஜகுமாரர்களுக்குதான் முடிசூட்டுவார்கள். ஆதலால், வசனத்தின்படி இராஜகுமார்கள் யார் என்று பாற்த்தால், “இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாய் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று வேதம் சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்கள் யார் என்று வேத வெளிச்சத்தில் நாம் பார்த்தால், அழைக்கப்பட்டவர்கள் அனேகர், அதில் தெறிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர் என்று தெறிகிறது!!  இந்த தெறிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசுவில் நிலைத்திருக்க தீர்மானித்து, வாழ்நாளில் இயேசுவைப்போல வாழ்ந்து அவர் நடந்தபடியே தானும் நடப்பார்கள். தங்களைத் தாங்களே வெருத்து அனுதினமும் தங்கள் சிலுவையை சுமந்து இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள். இவர்களே இயேசு கிறிஸ்துவின் மகிமையின் பங்களிகள். இவர்களுக்கே அவருடைய நன்மையினால் தேவன் முடிசூட்டுகிறார்.
இவர்களைப்பற்றி யாக்கோப்பு தான் எழுதிய நிருபத்தில் சொல்கிறார், “சொதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெருவான்” என்று. (யாக். 1:12). ஆதலால்; சில போதகர்கள் சொல்லுவதுபோல நாம் இராஜா வீட்டுப் பிள்ளைகள்தான்! ஆகிலும், இந்த உலகத்தில் அல்ல பரலோகத்தில் நாம் இராஜகுரர்கள் என்பதை இந்த நேரத்தில் மரந்துவிடக்கூடாது.
நன்மையினால் முடிசூட்டுவார் என்றதும், இன்றைய கிறிஸ்தவ சபைகள், இவ்வுலக ஆசீர்வாதங்களை அள்ளித்தருவார் என்று நினைத்து, அவர்கள் ஆலயங்களில் புத்தாண்டு தினத்தன்று பழைய ஏற்பாட்டு ஆசீர்வாத வசனங்களை பொறுக்கி சிறு அட்டை துண்டுகளில் அச்சிட்டு கொடுப்பார்கள். இதை விசுவாசிகளும் வாங்கி தங்கள் பைபிளில் வைத்துக்கொண்டு ஆசீர்வாத்த்திற்காக அந்த வருஷம் முழுவதும் கணவுகண்டுகொண்டு இருப்பார்கள்.
ஆகையால்; தேவன் அவர் நன்மையால் முடிசூட்டுவேன் என்று நமக்குச்சொல்லியிருப்பது என்னவென்றால், பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவுடன் இராஜாக்களாக இருந்து இந்த உலகத்தை ஆயிரம் வருஷம் அரசால்வதே, அவர் நமக்குக்கொடுக்கும் அவருடைய நன்மையாகும். இதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மரந்துவிடக்கூடாது. மேலும், இந்த உலகச்செல்வத்தை நம் கடின உழைப்பால் பெற்றுவிடலாம். ஆனால் பரலோகச்செல்வத்தை அவருக்காக நாம் ஏற்கும் பாடுகல் வழியாகத்தான் பெரமுடியும் என்று பைபிள் திட்டமாகச் சொல்கிறது. இன்னும், பாடுகள் ஏற்றால்தான் அவர் பிரமாணங்களை கற்றுக்கொள்ள முடியுமென்று சங்கீதக்காரனும் சொல்கிறார். “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன்” என்று. (சங்கீதம் 119:71).
ஆகையால்; நன்மை என்று சொல்லும்போது, அது பரலோக ஆசீர்வாதமேயன்றி இவ்வுலக ஆசீர்வாதம் அல்ல என்பதை நாம் உணர்ந்து, பரலோக ஆசீர்வாத்த்திற்காக இந்த ஆண்டில் உமக்காக பாடுகள் சகிப்பேன், என் வாழ்வில் நன்மை வந்தாலும், தீமைவந்தாலும் உம்முடைய சத்திய வழியிலிருந்து விளகமாட்டேன் என்று சூலுறைப்போம். கர்த்தர் தாமே அவருடைய ஆவியினால் இந்த ஆண்டில் வழிநடத்தி நித்திய நன்மையினால் உங்களை முடிசூட்டுவார். ஆமேன்.
சகோ.கெடார் K.மாசிலாமணி.
“பைபிள் நண்பன் அறக்கட்டளை”
பெங்களூர்.8
Email: biblefriend2009@yahoo.com
  • 7/23/2014 01:30:00 a.m.
கஷ்ட நஷ்ட நேரங்களில்
காக்கும் நேசர் உண்டெனக்கு
கவலை இல்லை கலக்கம் இல்லை
அவர் எனக்கு துணையல்லவோ

புதிய வாழ்வு தரும் நேசர்
பழைய எல்லாம் எடுத்து போட்டார்
இப்போ நான் இயேசுவின் பிள்ளை
துக்கம் எனக்கு இல்லை

பயம் இல்லை மறைவு இல்லை
ஒன்றும் எனக்கு இல்லை
  • 7/23/2014 01:29:00 a.m.
லக மக்களுக்கு உலக இறுதியில் நடைபெறும் சம்பவங்களை வேதாகமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வேதாகமத்தின் மிகவும் பயங்கர செய்தியாக அமைந்துள்ள இறுதி தீர்ப்புக்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள் மிகவும் அவதானம் செலுத்தி பார்க்கப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு இயேசு கூறிய இறுதிதீர்ப்புக்கள் மிகவும் கவனத்தை கவருகின்றன. மனிதத்தன்மையுள்ளவராக பிறரை அன்புடன் ஏற்றுக்கொண்டவரான சாந்தமுள்ள கிறிஸ்துவானவர் உலக இறுதி தீர்ப்புக்குறித்து மிகவும் கடுமையாக எச்சரிப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை குறித்து கணக்கொப்புவிக்கவேண்டிய மிகவும் கடுமையான காரியத்தை அறிவிக்கின்றார். அவர்கள் தங்களுடைய வாழ்வில் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன்களை அனுபவிப்பதற்காக தங்கள் வாழ்நாட்களை குறித்த கணக்கொப்புவிப்பை அறிவிக்க வேண்டியதாக உள்ளது. முதலாவதாக குறிப்பிடப்படும் அதிகூடிய தண்டனை பெறக்கூடியவர்களை இயேசுக்கிறிஸ்துவே சுட்டிக்காட்டுகின்றார். மதத்போதகர்கள் இவ்வித ஆக்கினையை அடைவார்கள் (1). இயேசுவின் சுவிசேஷத்தை தள்ளிவிட்ட நபர்களுக்கும் நகரங்களுக்கும் இவ்வித இறுதி தீர்ப்பு மிகவும் கொடூரமாக அமையும் என்பதாக இயேசு கூறுகின்றார் (2). கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ஏற்றுக்கொள்ளாமலம் கிறிஸ்துவை உதறிதள்ளிவிட்டவர்களுக்கு மிகுந்த ஆக்கினை உண்டு (3). ஓவ்வொரு மனிதனும் தனது ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (4). இயேசுக்கிறிஸ்து கூறியபடி ஒருவன் கொலையை விட குறைவான குற்றத்தை செய்திருந்தாலும் அவன் நரக ஆபத்திலே உள்ளான். மனிதர் தாம் மற்றோக்கு காட்டிய அன்பின் பிரகாரமாகவே அவர்கள் இறைவனது அரசிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவர். அல்லது அதற்கேற்ற விதத்தில் நரக ஆக்கினையை அடைவர்.

1. குறிப்பாக மாற்கு 12:38-40ல் நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். ஏனெனில் வெளிப்பிரகாரமாக பரிசுத்த வாழ்வை நடத்தி உள்ளான விதத்தில் உலக ஆசாபாசங்களுக்கு உட்பட்டு நடப்போர் இறுதி தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது. அவர்கள் இறுதி தீர்ப்பில் அதிக ஆக்கினை அடைவார்கள் என இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றார்.


2. இயேசுவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத நகரங்களுக்கு இறுதி தீர்ப்பில் மிகவும் கொடிய தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரிடும். அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3. மனந்திரும்ப விருப்பமற்றவர்களுக்கு ஆக்கினை உண்டு. அவர்களது சந்ததிகளுக்கும் அவ்விதமே நேரிடும்.

4. மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எப்படி இந்த ஆக்கினையிலிருந்து தப்பிக்கொள்வது. கர்த்தருடைய நாமத்தினால் வருகின்ற இயேசுக்கிறிஸ்துவை ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் அவரை காணாதிருப்பீர்கள். மத்தேயு 23:37-39 “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”. ஏனெனில் உலகின் பாவங்களுக்காக மரித்தவர் கிறிஸ்துவே. அவரது மரணம் மூலமாக நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவரை விசுவாசிப்பதே மிகச்சிறந்த வழிமுறையாகும். இன்றும் உயிரோடு உள்ளவராக எம்மை வழிநடத்துபவரான கிறிஸ்துவை விசுவாசிப்பதே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். நித்திய ஜீவன் இலவசமாய் இறைவனால் கொடுக்கப்படுகின்றது. இந்த இலவச நித்திய வாழ்க்கையை அனுபவிக்க செய்யவேண்டியது ஒன்றே. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ஏனெனில் வரப்போகும் கிறிஸ்து இராஜாவாக உலகத்தை நியாயந்தீர்க்க வருகின்றார். அவரது வருகையில் உத்தமாய் இருந்தோர் நித்திய ஜீவனைபெற்று பரலோகத்தை அடைவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரை எதிர்ப்போர் மிகுந்த ஆக்கினை அடைவதற்காய் நரகினில் தள்ளப்படுவதற்காய் மிகப்பெரிய நியாயத்தீர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டிய அவமானத்திற்குள்ளாய் தங்களை ஆயத்தப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • 7/23/2014 01:27:00 a.m.
பாடிடுவேன் நானே
புதிய பாடல்களை
உம்மையென்றும் துதிப்பேன்
பாடல்கள் பாடிடுவேன்

உயிருள்ள தேவன் நீரே
மாசற்ற கர்த்தர் நீரே
சிலுவையில் மரித்தீரே
என் பாவம் நீக்கினீரே

தினமும் நான் பாடுவேன்
உம்மையே துதித்து
கர்த்தாவே நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதே

காத்தீர் உம் கரங்களால்
வாழ்வளித்தீரய்யா
உம் நாமம் எனக்கென்றும்
ஆறுதலே நாதா

சுகம் தரும் தேவன் நீரே
ஆற்றிடும் நாயகரே
போற்றிடுவேன் உம்மையே
மகிழ்ந்திடுவேன் உம்மிலே

நன்றி உமக்கென்றும்
நான் சொல்வேன் இயேசு நாதா
நன்றி நன்றி ஐயா
பாடிடுவேன் என்றுமே
  • 7/23/2014 01:24:00 a.m.
GLS aims to spiritually enrich the entire family to enrich society. To this end, we publish a monthly magazine ‘Harvest Times for Your Family’ with specific columns dedicated to Children, Youth, Women, Bible Study, Devotions and Contemporary Issues. - See more at: http://glsindia.com/shopping/magazines/#sthash.Ixbctyzh.dpuf
  • 7/23/2014 01:17:00 a.m.
நான் விக்கிரக வழிபாட்டு முறையில் வளர்ந்து வந்தவன், அப்படி வளர்ந்தாலும் அவைகளை முறைப்படி வழிபட்டு வந்தாலும் என்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்தது. இதற்கான பதிலை எதிலும் காணமுடியவில்லை. (வெங்காயத்தை உரித்து அதில் ஏதும் காண்பேன் என்பவன் சத்தியத்தை காணமுடியாதவன், அதேபோல்) கடவுள் என்றால் என்ன? என்பதை முன்னோர் சொல்லித் தந்த முறையில் காணக்கூடியதாக இல்லை, மனிதனால் கடவுளைத் தரிசிக்க முடியாது என்ற நிலை அத்துடன் நான் வழிபடுபவைகள் விக்கிரகங்களாக இருக்கிறதே, அவைகள் எப்படி செவி கொடுக்கும்? எப்படி பேசும்? எப்படி காணும்? 

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும்,மனுசருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது: அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது. அவைகளுக்கு காதுகளிருந்தும் கேளாது: அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்கு கைகளிருந்தும் தொடாது அவைகளுக்கு கால்களிருந்தும் நடவாது: தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும்,அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்.
சங்கீதம் 115:4-8 

இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு இவைகளுக்கான பதில் கிடைத்தது. அதன் ஊடாக எனது வாழ்வில் கண்டிராத உண்மைகளையும், நான் வாழ்ந்த அறியாமையுள்ள காலங்களையும் சிந்தித்தேன். ஆராய்ந்து பார்க்க,பார்க்க அந்த உண்மைகளை எந்த பணத்தினாலோ, பதவியினாலோ, படிப்பினாலோ எதனாலும் பெறமுடியாது என்பதை அறிந்து கொண்டேன். உலகத்தின் அதாவது மனிதனின் ஆரம்பம் முதல் உலகத்தின் இறுதிவரை எல்லாமே அந்த இடத்திலே காணக்கூடியதாக இருக்கிறது. அதுதான் பரிசுத்தவேதாகமம்.அதில் உள்ள வார்த்தைகள் மனித உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல, 

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 
எபிரேயர் 4: 12 

இதன் ஊடாக ஜீவப் பாதையைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இங்கே கர்த்தர்; ஜீவனுள்ளவராகவும், வானத்தையும் பூமியையும் அதில் உள்ள யாவற்றையும் உண்டாக்கினவராயிருக்கிறார். இங்கே கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்றால்: 

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப்பாருங்கள்;:அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்: நானே தேவன் வேறொருவரும் இல்லை. வானங்களைச் சிருஸ்டித்துப் பூமியையும் வெறுமையையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. 
ஏசையா 45:18,22 

கர்த்தரோ மெய்யான தெய்வம்: அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா: அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்: அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்;. எரேமியா 10:10 

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3 

இங்கே நான் பெற்ற நித்தியமான அவருடைய அன்பையும், சமாதானத்தையும் உங்கள் ஒவ்வொருவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

நாம் எல்லோரும் உள்ளத்திலே பாரம் மிகுந்தவர்கள் இந்தப் பாரத்தை (வருத்தமான) எங்கே இறக்கி வைக்க முடியும்? யார்தான் அவைகளை ஏற்றுக்கொள்வார்கள்? ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்' என்றார். எவ்வளவு ஆறுதல் 

நான் ருசித்தவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கங்கள். சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.......ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்' யோவான் 8:32,36 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.... அப்.16:31 

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுசர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.... அப்.4:12 

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்' அப்.10:35

Read full article:
Feel it! Say it! Contact us